நிரவ் மோடி 6 பாஸ்போர்ட்டுகள் வைத்திருந்தது அம்பலம்

நிரவ் மோடி 6 பாஸ்போர்ட்டுகள் வைத்திருந்தது அம்பலம்

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நிரவ் மோடி, 6 பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பது தெரிய வந்துள்ளதுபாஸ்போர்ட்டை முடக்கிய பின்னும் வெவ்வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்று கொண்டிருக்கும் நிரவ் மோடி, கடைசியாக பெல்ஜியத்தில் இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், நிரவ் மோடி 6 போஸ்போர்ட்டுகளை வைத்திருப்பதை தற்போது இந்திய புலனாய்வுத்துறையினர் கண்டறிந்துள்ளனர். அவற்றில் இரண்டு பாஸ்போர்ட்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருப்பதாகவும், மற்றவை பயன்பாட்டில் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக, நிரவ் மோடி மீது தனியாக மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.