வீணைகளுக்கு அஞ்சல் தலை வெளியிட வேண்டும் – சஞ்சய்காந்தி

தஞ்சாவூர் பகுதியில் தயாராகும் வீணைகளுக்கு அஞ்சல் தலை வெளியிட வேண்டும் – சஞ்சய்காந்தி

தஞ்சாவூர் பகுதியில் தயாராகும் வீணைகளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என அறிவுசார் சொத்துரிமை அட்டார்னி சங்க தலைவர் சஞ்சய்காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்

தஞ்சை மாவட்டத்தில் 22 வீணை தயாரிப்பவர்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான சான்றிதழை, அறிவுசார் சொத்துரிமை அட்டார்னி சங்க தலைவர் சஞ்சய்காந்தி, பூம்புகார் விற்பனை மேலாளர் அருண் ஆகியோர் வீணை உற்பத்தி செய்யும் 22 கலைஞர்களுக்கு சனிக்கிழமை நடந்த விழாவில் வழங்கினர்.